தினத்தந்தி புகாா்பெட்டி
பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு சின்னசேமூர் எல்.வி.ஆர்.காலனி ரோட்டு ஓரத்தில் பலர் குப்பைகளை போட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அங்கு குப்பை குவிந்து கிடக்கிறது.. காற்று அடிக்கும்போது குப்பை தூசு பறந்து அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள்மீது படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவா, ஈரோடு.
ரோட்டை சீரமைக்க வேண்டும்
கோபியை அடுத்த கரட்டூர் அருகே உள்ள வங்கி எதிரில் தார்ரோடு செல்கிறது. இந்த ரோடு ஏதோ ஒரு பணிக்காக தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து தோண்டப்பட்ட இடம் சரியாக மூடப்படவில்லை. இதனால் ரோடு மேடு, பள்ளமாக குழிபோல் காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் குழிக்குள் ஏறி இறங்கும்போது வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விட நேரிடுகிறது. எனவே விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. அதற்கு முன்பு ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கரட்டூர்.
சாக்கடை பணி விரைந்து முடியுமா?
ஈரோடு கொங்கு நகர் பகுதியில் சாக்கடை வடிகால் கட்டப்பட்டது. ஆனால் பணியை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டனர். இதனால் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் தேங்கி நின்றது. இதைத்தொடர்ந்து கழிவுநீரை அருகே உள்ள ஒரு காலி இடத்தில் திருப்பி விட்டு வருகிறார்கள். இதனால் கொசு தொல்லை மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே சாக்கடை வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொங்கு நகர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஈரோடு கரூர் ரோட்டில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்து விடுகின்றனர். இதனால் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த அவதியடைகிறார்கள். மூச்சு திணறலும், கண் எரிச்சலும் ஏற்படுகிறது. எனவே மேற்படி இடத்தில் குப்பைகளை கொட்டி தீவைப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், ஈரோடு.
பணியை விரைந்து முடிக்க வேண்டும்
கவுந்தப்பாடி முதல் கோபி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் விபத்துக்களும் ஏற்படுகிறது. உடனே 4 வழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ம.லோகநாதன், பாலப்பாளையம்
பாராட்டு
ஈரோடு சம்பத் நகர் அருணாசலம் வீதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு இருந்தது. இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியாகி இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டு்க்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மணிகண்டன், ஈரோடு.
---------------
Related Tags :
Next Story