சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு ரெயிலில் 30 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது
சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு ரெயிலில் 30 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
திருச்சி, ஏப்.27-
சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு ரெயிலில் 30 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
ரெயிலில் கஞ்சா கடத்தல்
கடந்த சில நாட்களாக ரெயில்களில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அரியலூர் ரெயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் சோதனை மேற்கொள்ள ஆயத்தமானார்கள். அப்போது சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
30 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
அதன்பேரில், அரியலூர் ரெயில் நிலையம் வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம், திருச்சி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைராஜா ஆகியோர் தலைமையிலான குழுவினர் மற்றும் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ஒவ்வொரு பெட்டியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவில்லா பெட்டி ஒன்றில் பெண் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை கடத்தி செல்வது தெரியவந்தது.
ரெயில், திருச்சி அருகே ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தை கடந்த நிலையில், ரெயில் பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து போலீசார் திடீரென ரெயிலை நிறுத்தினர். இடையில் ரெயில் திடீரென நின்றதும் ரெயில் பயணிகள் அச்சம் அடைந்தனர். அதே வேளையில் ரெயில் நின்றதும், கஞ்சா பொட்டலங்களுடன் பயணித்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அயோத்திபட்டியை சேர்ந்த பால்ராஜ் மனைவி ராஜகொடி (வயது 53) என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த 30 கிலோ கஞ்சா பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து விசாரணை
விசாரணையில், அவர் சென்னையில் இருந்து ஆந்திராவை சேர்ந்த நபர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை வாங்கி கொண்டு மதுரைக்கு கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் ராஜகொடி, சென்னையில் கஞ்சா பொட்டலங்களை பெற்ற ஆந்திராவை சேர்ந்த நபர்கள் யார்? எனவும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story