70 பவுன் நகைகள் - 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை


70 பவுன் நகைகள் - 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 27 April 2022 2:54 AM IST (Updated: 27 April 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகைகள் - 1½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜீயபுரம், ஏப்.27-
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகைகள் - 1½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பக்கத்து வீ்ட்டில் திருட்டு
திருச்சியை அடுத்த  பெட்டவாய்த்தலை காவிரி நகரை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் துபாயில் பணியாற்றி வருகிறார்.  இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (வயது 55). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். 2-வது மகளும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மூத்த மகளை பார்ப்பதற்காக பஞ்சவர்ணம் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றார். மேலும் வீட்டில் உள்ள செடிகளையும், கோழிகளையும் பார்த்துக் கொள்ள கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பொய்யாமணியை சேர்ந்த நடராஜன் என்பவரிடம் தெரிவித்து சென்றுள்ளார்.  அதன்படி நடராஜனும், அவ்வப்போது வந்து வீட்டை பார்த்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் பஞ்சவர்ணத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினரான  ராஜா என்பவரது வீட்டில் 3 பவுன் நகை திருடு போய் இருந்தது. இந்த தகவல் சென்னையில் உள்ள பஞ்சவர்ணத்திற்கு தெரியவந்தது. இதனையடுத்து பஞ்சவர்ணம் நடராஜனை தொடர்பு கொண்டு அருகில் உள்ள வீட்டில் நகை திருடுபோய்விட்டது, எனது வீட்டையும் சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார்.
70 பவுன் நகைகள் கொள்ளை
அதன்படி  நடராஜன் வந்து பார்த்த போது, பஞ்சவர்ணத்தின் வீட்டு முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்த அவர்உள்ளேசென்றுபார்த்தபோது,பீரோஉடைக்கப்பட்டு நகை-பணம் கொள்ளைபோனது தெரியவந்தது. இது குறித்து நடராஜன்பஞ்சவர்ணத்திற்கு தகவல் தெரிவித்தார்.
 சென்னையிலிருந்து விரைந்து வந்த பஞ்சவர்ணம் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 7 பட்டு புடவைகள், 5 கோல்டு கெடிகாரம் உள்ளிட்டவைகள் கொள்ளை போனது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாதததை ேநாட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
வலைவீச்சு
இது குறித்து பஞ்சவர்ணம் பெட்டவாய்த்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவுசெய்தனர்.மேலும்மோப்பநாய்வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்றது. ஆனால் யாரையும்கவ்விபிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story