‘இலவச அரிசி திட்டத்தை ரத்து செய்யுங்கள்’; பசவராஜ் பொம்மை முன்னிலையில் யத்னால் எம்.எல்.ஏ. பேச்சு
இலவச அரிசி திட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று பசவராஜ் பொம்மை முன்னிலையில் யத்னால் எம்.எல்.ஏ. கூறினார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று விஜயாப்புரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு நீர்ப்பாசன திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
தாலி பாக்கிய, இலவச அரிசி வழங்கப்படும் அன்ன பாக்கிய போன்ற திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தைரியமாக செயல்பட்டு இந்த திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் பேசினார்.
Related Tags :
Next Story