கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு(கியாஸ் சிலிண்டர்) நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், ஆண்டிமடம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நாளை(வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story