மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் முன்பு, மத்திய அரசைக் கண்டித்து சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மாவட்டத் தலைவர் அகஸ்டின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மோட்டார் வாகனத் துறையை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்ற வழிவகை செய்யும் 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். காப்பீடு கட்டணம், சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் மீதான கலால் வரியை குறைத்து, ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். மாநில அரசு 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது. ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கனகராஜ் உள்பட ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story