கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 April 2022 4:42 PM IST (Updated: 27 April 2022 4:42 PM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் வசிக்கும் அனைவருக்கும் வீடு மற்றும் வீட்டுமனை வழங்கக்கோரி குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு இடது தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

குத்தாலம்
நீர்நிலை பகுதி மற்றும் சாலையோரம் வசிக்கும் அனைவருக்கும் வீடு மற்றும் வீட்டுமனை வழங்கக்கோரி குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு இடது தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொறுப்பாளர் செல்லதுரை தலைமை தாங்கினார். இதில், இடது தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் வீரசெல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.  இதில், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் இடது தொழிற்சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
----

Next Story