விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 27 April 2022 4:47 PM IST (Updated: 27 April 2022 4:47 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
 மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் எனது  தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை மட்டும் தெரிவித்து பயன் பெறலாம். கூட்டத்தில், கலந்து கொள்பவர்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Next Story