ஏலகிரிமலையில் தைல மரங்களை வெட்டிய வாலிபருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
ஏலகிரிமலையில் தைல மரங்களை வெட்டிய வாலிபருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலாத் தலமான இங்குள்ள கோட்டூர் வனப்பகுதியில் ஏலகிரி மலை வனவர் பரந்தாமன் தலைமையில் வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப்பகுதிக்குள் மரம் வெட்டும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது அங்கு மர்ம நபர் ஒருவர் 20 தைல மரங்களை வெட்டி சாய்த்து இருந்தது தெரிந்தது.
வன ஊழியர்கள் வருவதைக் கண்டதும் அந்த நபர் தப்பிக்க முயன்றார். அவரை வளைத்துப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏலகிரி மலையில் உள்ள பள்ளக்கணியூர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ராமச்சந்திரன் (வயது32) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து 20 தைல மரங்களை வெட்டிய குற்றத்திற்காக ராமச்சந்திரனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story