தூத்துக்குடியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: வெள்ளிக்கிழமை நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடக்கிறது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு சிலிண்டர் வினியோகஸ்தர்கள், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்கலாம்.
தீர்வு
பொதுமக்கள், நுகர்வோர் பெயர் மாற்றம், புதிய எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடு, டெபாசிட் தொகை திருமப பெறுதல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாமல் இருத்தல், எரிவாயு உருளையை வினியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதேனும் குறைபாடுகள் மற்றும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் கூட்டத்தில் தெரிவித்து தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story