மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோவில் கைது


மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 27 April 2022 5:49 PM IST (Updated: 27 April 2022 5:49 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13-வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பகுதியை சேர்ந்த மார்பின்சிரில் (வயது 25) என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அதே பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி வசித்து வந்த 17 வயது சிறுவனும், அந்த மாணவியை கடந்த ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலையில் உள்ள சைல்டு லைனிற்கு ரகசிய தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் போலீசாருடன் நேரில் வந்து விசாரணை நடத்தி மாணவியை மீட்டு திருவண்ணாமலை உள்ள வரவேற்பு இல்லத்திற்கு அழைத்து சென்றனர். 

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன், மார்பின்சிரில் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story