திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கருத்தரங்கம்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்  உலக மலேரியா தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 27 April 2022 5:58 PM IST (Updated: 27 April 2022 5:58 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கருத்தரங்கம் சுயநிதிப்பிரிவு மாணவர்களுக்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன், கருத்தரங்கை தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். விலங்கியல் துறை பேராசிரியை ஆரோக்கியமேரி பர்னாந்து கலந்துகொண்டு உலக மலேரியா தின விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். முடிவில், சுயநிதிப்பிரிவு இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதி தேவி நன்றி கூறினார். சுயநிதிப்பிரிவு பேராசிரியர்கள் சிங்காரவேலு, சிரில் அருண், கரோலின் கண்மணி ஆனந்தி, திருச்செல்வன், ரூபன் சேசு, அடைக்கலம், செந்தில்குமாரி, ஸ்வீட்லின் டயானா, அண்டனி பிரைட் ராஜா, கவிதா, ராஜபூபதி, ஜெயந்தி, பென்னட், ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
இதேபோன்று, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இன்ஸ்டியூசன் இன்னோவேஷன் கவுன்சில் சார்பாக உலக அறிவுசார் சொத்து தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வரும், கவுன்சில் தலைவருமான மகேந்திரன் தலைமை தாங்கினார். கவுன்சில் அமைப்பாளர் நித்தியானந்த ஜோதி வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். 
சிறப்பு அழைப்பாளராக வக்கீல் பெருமாள் கலந்து கொண்டு அறிவுசார் சொத்து பற்றி சிறப்புரையாற்றினார். ஆங்கிலத்துறை ேபராசிரியையும், கவுன்சில் உறுப்பினருமான ராமஜெயலட்சுமி நன்றி கூறினார்.

Next Story