நகராட்சியை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் நகராட்சியை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா அடுத்த மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவுக்காக குடியாத்தம் நகராட்சி சார்பில் செய்யப்படும் அடிப்படை வசதிகளுக்கு ஏற்படும் செலவினங்களை இந்து சமய அறநிலைத்துறை வழங்கவேண்டுமென நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் திருவிழாவிற்காக கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அமைக்கப்படும் கடைகளுக்கு இ-டெண்டர் மூலம் ஏலம் விட வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது.
நகராட்சி சார்பில் கோவில் நிர்வாகத்திடம் செலவினங்களுக்காக பங்கு கேட்பதை கண்டித்தும், இ-டெண்டரால் சாதாரண வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தும் இந்து முன்னணி சார்பில் குடியாத்தம் நகராட்சியை கண்டித்து முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்தனர். அவர்களை குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து தொடர்ந்து நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ரவி, நகரத்தலைவர் கார்த்தி, செயலாளர்கள் ராஜேஷ், ஆறுமுகம், யுவன் ராஜீவ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோட்ட தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கர், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆர்.ஜி.எஸ்.சம்பத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இந்துமுன்னணியினர் நகராட்சியை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசிடம் இந்துமுன்னணியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story