மராட்டியத்தில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாகிறது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 April 2022 6:46 PM IST (Updated: 27 April 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

மும்பை, 
மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த 2-ந் தேதி முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் தளத்தப்பட்டன. ஆனால் நாட்டில் மீண்டும் கொரோனா தலைதூக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் தாமாக முன்வந்து முககவசம் அணிய வேண்டும் என்றும், வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் மராட்டிய அரசு வலியுறுத்தி இருந்தது.
இந்தநிலையில் மராட்டியத்தில் 100-க்கு கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று  153 ஆக அதிகரித்தது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. 
இது குறித்து மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் தோபே  நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார். இந்த கூட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்படும் என்று கருதுகிறேன்” என்றார்.


Next Story