மனுநீதி நாள் முகாமில் ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்


மனுநீதி நாள் முகாமில் ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 27 April 2022 8:02 PM IST (Updated: 27 April 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

மனுநீதி நாள் முகாமில் ரூ.30 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் அன்பழகன் வழங்கினார்.

கலசபாக்கம் 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நார்த்தாம்பூண்டியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுல், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முகாமில் நார்த்தாம்பூண்டி, சி.ஆண்டாப்பட்டு, புதிய நெல்லிமேடு, பழைய நெல்லிமேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 90 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் அன்பழகன் வழங்கி பேசினார். 

முகாமில் மொத்தம் 146 மனுக்கள் பெறப்பட்டன. அதில் தகுதியான 90 மனுதாரர்களுக்கு மட்டும் முகாமில் அரசு திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 56 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரி தெரிவித்தார். முகாமில் பலர் கலந்து கொண்டனர்.

Next Story