வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை
பொன்னேரி அருகே வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னேரி,
பொன்னேரியை அடுத்த புலிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). இவர் வீட்டுக்கு தேவையான மாவு அரைக்க வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், இலவம்பேடு கிராமம் அருகே தான் கடன் தொல்யைால் பூச்சி மருந்து சாப்பிட்டு விழுந்து கிடப்பதாக செல்போனில் உறவினரிடம் பேசியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story