மின்தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் மின்தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டாச்சிமங்கலம்,
சமூகநீதி அதற்கான சர்வதேச குடியியல் உரிமைகள் ஆணையம் சார்பில் தியாகதுருகம் துணை மின் நிலையத்தை கண்டித்து மின்சார வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் கபீர்பாஷா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் மணிகண்டன், மாநில இளைஞர் அதிகார தலைவர் சந்துரு, நகர தலைவர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி தலைவர் அன்புராஜ் வரவேற்றார். தியாகதுருகம் பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையை கண்டிப்பது, கம்பியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தியாகதுருகம் நகர் முழுவதும் மும்முனை மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் ஜெயவேல், தமிழ்வாணன், வேலு, பிரகாஷ், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story