சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 42 ஆண்டு சிறை
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 42 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 42 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
பாலியல் வன்கொடுமை
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அய்யனூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்குமார் (வயது 29). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் இதுகுறித்து வெளியே சொன்னால் தாய், தந்தையை கொலை செய்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ்குமாரை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
42 ஆண்டு சிறை
இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ்குமாருக்கு போக்சோ பிரிவுக்கு 20 ஆண்டு சிறை உள்பட 4 பிரிவின் கீழ் மொத்தம் 42 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார். மேலும் இந்ததண்டனையை அவர் அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் கூறினார். இதன்படி மொத்தம் 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த காங்கயம் மகளிர் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.
Related Tags :
Next Story