கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டி


கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டி
x
தினத்தந்தி 27 April 2022 9:58 PM IST (Updated: 27 April 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.

பட்டிவீரன்பட்டி:

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜேஸ்வரி. இவருக்கு, அதேபகுதியில் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் 2 வயது கன்றுக்குட்டி ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

 அப்போது திடீரென தோட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் கன்றுக்குட்டி தவறி விழுந்து விட்டது. சுற்றுச்சுவர் இல்லாத 60 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 15 அடி வரை தண்ணீர் இருந்தது. தண்ணீரில் தத்தளித்தப்படி கன்றுக்குட்டி போராடி கொண்டிருந்தது. 

இதற்கிடையே தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டி அங்கு இல்லாததை கண்டு நாகராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். கன்றுக்குட்டியை தேடியபோது, அது கிணற்றுக்குள் தத்தளித்தது தெரியவந்தது. 

இதுகுறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் வெங்கடேசன் (போக்குவரத்து) தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி சுமார் 1 மணி நேரம் போராடி கன்றுக்குட்டியை மீட்டனர்.

Next Story