பர்கூரில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
பர்கூரில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
பர்கூர்:
பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார திருவிழா மற்றும் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமை மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செல்லக்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். இந்த முகாமில் மருத்துவ குழுவினர் பொது மருத்துவம், தாய் சேய் நல மருத்துவம், குழந்தை நல மருத்துவம், கண் மருத்துவம் ஆகியவை செய்யப்பட்டன. முகாமையொட்டி ஊட்டச்சத்து கண்காட்சி நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவிகளின் யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், பர்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்னபூரணி, வெங்கட்ராம கணேஷ், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், தி.மு.க. மாநில விவசாயி அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story