தர்மபுரி நெசவாளர் நெடுமாறன் நகருக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் பணி தொடக்கம்


தர்மபுரி நெசவாளர் நெடுமாறன் நகருக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 27 April 2022 10:28 PM IST (Updated: 27 April 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நெசவாளர்-நெடுமாறன் நகருக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் பணி தொடங்கியது.

தர்மபுரி:
தர்மபுரி நெசவாளர் நகரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த 2013-ம் ஆண்டு 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதில் இருந்து நெசவாளர் நகர் மற்றும் அருகிலுள்ள நெடுமாறன் நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கடந்த 9 ஆண்டுகளாக அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தர்மபுரி நகராட்சி அதிகாரிகள் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நெசவாளர் நகர், நெடுமாறன் நகர் பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கான பணிகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் அந்த பகுதி பொது மக்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் பணியை தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, நகர பொறுப்பாளர் அன்பழகன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவண பாபு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் சங்கரன், உதவி செயற்பொறியாளர் கதிரவன், உதவி பொறியாளர் நவீன் மற்றும் கவுன்சிலர்கள் பாண்டியன், ஜெகன், சத்யா, சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story