விளையாடி கொண்டிருந்த போது 5 வயது சிறுமி கீழே தவறி விழுந்து பலி
விளையாடி கொண்டிருந்த போது 5 வயது சிறுமி கீழே தவறி விழுந்து பலியானாள்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள பந்திகுறி கிராமத்தி சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகள் கீர்த்தி (வயது 5). சிறுமி கீர்த்தி கடந்த 22-ந் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது திடீரென கீழே தவறி விழுந்தாள். இதில் அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பெற்றோர் அவளை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கீர்த்தி பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story