வேடசந்தூர் வக்கீல்கள் சங்க ஆண்டு விழா


வேடசந்தூர் வக்கீல்கள் சங்க ஆண்டு விழா
x
தினத்தந்தி 27 April 2022 10:44 PM IST (Updated: 27 April 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் வக்கீல்கள் சங்க ஆண்டு விழாவில் மாவட்ட நீதிபதி ஜமுனா பங்கேற்றார்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் வக்கீல் சங்கத்தின் 53-வது ஆண்டு விழா வேடசந்தூர் கோர்ட்டு வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு வேடசந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். 

ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார், உரிமையியல் நீதிபதி முருகாநந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் சங்க தலைவர் பாளையம் முருகேசன் வரவேற்றார். விழாவில் திண்டுக்கல் மாவட்ட நீதிபதி ஜமுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 

அவர் பேசும்போது, உடற்கூறு பற்றி டாக்டர் படித்திருந்தால் போதும். கட்டுமான பணியை பற்றி என்ஜினீயர் தெரிந்திருந்தால் போதுமானது. ஆனால் வக்கீல், அனைத்து தொழிலையும் கற்றிருக்க வேண்டும். டாக்டர், கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களையும் வக்கீல்கள் கேள்வி கேட்கும் அதிகாரம் படைத்தவர்கள். நாங்கள், வக்கீலாக இருந்து தற்போது நீதிபதியாக உயர்ந்திருக்கிறோம். தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு வக்கீல்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றார். 

விழாவில் அரசு வக்கீல் முத்துச்சாமி, வக்கீல் சங்க செயலாளர் தங்கவேல் முனியப்பன், பொருளாளர் ராஜரத்தினம், துணைத்தலைவர் கந்தசாமி, துணைச்செயலாளர் மாதவன், வக்கீல் சங்க முன்னாள் தலைவர் வேடசந்தூர் முருகேசன், முன்னாள் பொருளாளர் நாகராஜ் மற்றும் மூத்த வக்கீல்கள் பங்கேற்றனர்.

Next Story