விழுப்புரத்தில் வணிக வரித்துறையினர் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் வணிக வரித்துறையினர் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 April 2022 10:49 PM IST (Updated: 27 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் வணிக வரித்துறையினர் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


விழுப்புரம், 

துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு உள்ளிட்ட கடந்த ஆண்டு சட்டப்பேரவை அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும், பழிவாங்கும் இடமாறுதல்களை ரத்து செய்ய வேண்டும், நேரடி நியமனங்களை 5 சதவீதமாக குறைக்க வேண்டும், 

குலுக்கல் முறையில் பொது மாறுதலை தவிர்த்து கலந்தாய்வு முறையில் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் வணிகவரித்துறையினர் கோரிக்கை அட்டை அணிந்தபடி பணியாற்றியதோடு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அந்த வகையில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் விழுப்புரம் வணிக வரித்துறை துணை ஆணையர் அலுவலகங்கள் (நிர்வாகம், ஆய்வு), உதவி ஆணையர் 1, 2 அலுவலகங்கள், 

திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள வணிகவரித்துறை அலுவலகங்களில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர்கள் முதல் உதவி ஆணையர்கள் வரை அனைவரும் கோரிக்கை அட்டை அணிந்தபடி பணியாற்றினர்.


மேலும் விழுப்புரத்தில் உள்ள வணிகவரித்துறை துணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் மனோகரன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாநில செயலாளர்

 ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் வணிகவரித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story