அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 27 April 2022 11:04 PM IST (Updated: 27 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது

 சிங்கம்புணரி, 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல வருடங்களாக அர்ச்சகராக பாலசுப்ரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை அவர் 6 மணி அளவில் கோவிலில் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.மேலும் அதில் இருந்த பணம் மற்றும் வெண்கல வேல் ஒன்றும் திருட்டு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.கோவிலின் முன்புற கதவு உடைக்கப்படாமல் அருகில் உள்ள கடை மாடியிலிருந்து கோவில் மாடிப்படி வழியாக உள்ளே சென்று திருடி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளைச் சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இப்பகுதியின் அருகில் உள்ள மற்றொரு கோவிலான அய்யப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரவு நேரங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக இரவு நேர ரோந்து பணியை போலீசார் அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story