பால் சுவாமிகள் மடத்தில் குரு வழிபாட்டு விழா
வேதாரண்யம் அருகே உள்ள பால்சுவாமிகள் மடத்தில் குரு வழிபாட்டு விழா நடந்தது.
வேதாரண்யம்:-
வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு, ஆண்டியப்பன்காட்டில் பால்சுவாமிகள் திருமடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியின் 151-வது குரு வழிபாட்டு பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி அங்கு அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு திரவியங்கள், பால், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. அதை தொடர்ந்து பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடாசலபதி வரவேற்றார். வேதாரண்யம் சாதுக்கள் மடத்தை ஞானேஸ்வரனந்தா சுவாமிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story