நாமக்கல்லில் முககவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
நாமக்கல்லில் முககவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
நாமக்கல்:
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் உத்தரவின்பேரில் நாமக்கல் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஷாஜகான், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் நாமக்கல் மணிக்கூண்டு அருகே முககவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது முககவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு முககவசம் அளித்த அவர்கள், இனிவரும் காலங்களில் முககவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிய நபர்கள், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள் என போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சுமார் 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story