சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு


சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு
x
தினத்தந்தி 27 April 2022 11:06 PM IST (Updated: 27 April 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் துறை, வட்டார போக்குவரத்துத்துறை மற்றும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர், உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தூர்வேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வம், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.டி/பி.எல். நெடுஞ்சாலை திட்ட மேலாளர் கருணாகரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக  திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி கலந்து கொண்டு நெடுஞ்சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்களை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார். தொடர்ந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு கோட்டாட்சியர் யோக ஜோதி இனிப்புகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சுங்கச்சாவடி மேலாளர்கள் ராம் கிஷோர், வீரபாபு, பராமரிப்பு மேலாளர்கள் ரகுநாத், சிவசங்கரன் மற்றும் பாதுகாப்பு அதிகாரி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story