தினத்தந்தி புகார்பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டி
தொற்று நோய் பரவும் அபாயம்
திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட திருவரம்பு மேல்நிலைப்பள்ளி அருகே கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் குப்பைகள் நிறைந்து சாக்கடை நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையில் உள்ள குப்பைகளை அகற்றி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், திருவரம்பு.
சாலையை சீரமைக்க வேண்டும்
கிள்ளியூர் ஊராட்சிக்குட்பட்ட கையாளவிளை பகுதிக்கு செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபின் ராஜா, கையாளவிளை.
சேதமடைந்த மின்கம்பங்கள்
வேர்க்கிளம்பி-சாமியார்மடம் சாலையில் காட்டாத்துறை ஊராட்சி அலுவலகத்திற்கும் வீயன்னூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் உள்ள கம்பங்கள் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மீது சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
சேதமடைந்த சாலை
திங்கள்நகரில் இருந்து குலசேகரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாஹீர், குளச்சல்.
பஸ்சை முறையாக இயக்க வேண்டும்
நாகர்கோவிலில் இருந்து கடியப்பட்டணத்துக்கு தடம் எண்-14 என்ற மகளிருக்கு கட்டணமில்லா பஸ் இயங்கி வருகிறது. தற்போது இந்த பஸ் சில நாட்களாக சரியாக இயங்குவதில்லை. மேலும் பஸ்சின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால் தினமும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பஸ்சை முறையாக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வர்க்கீஸ், கடியப்பட்டணம்.
பட்ட மரத்தை அகற்ற வேண்டும்
வடசேரி 10-வது வார்டில் காணியாளன் புதுதெரு உள்ளது. இந்த தெருவில் சாலையின் ஓரத்தில் ஒரு பட்ட மரம் நிற்கிறது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மரத்தில் உள்ள கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே பட்ட மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், வடசேரி.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அண்ணாநகரில் இருந்து பறக்கின்கால் கால்வாய் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, நாகர்கோவில்.
Related Tags :
Next Story