குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்


குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 April 2022 11:22 PM IST (Updated: 27 April 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் கூறினார்.

திருவாரூர்:
குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்  என நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் கூறினார்.
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் 
திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் குழந்தை நலக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், நகர் மன்ற உறுப்பினர்கள் கஸ்தூரி, பெனாசிர் ஜாஸ்மின், அன்பழகன், இடைநிலை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், குழந்தை பாதுகாப்பு அலுவலக பணியாளர் சரிதா, வட்டார மருத்துவ அலுவலர் குருதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நகர்மன்ற தலைவர் கூறியதாவது:-
தொழிலாளர் முறையை 
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story