திருச்செங்கோடு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
திருச்செங்கோடு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சீர்வரிசை
திருச்செங்கோடு அருகே செங்கோடம்பாளையம் நாடார் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (30). இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பட்டுக்கோட்டையில் சரண்யாவின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
இதில் சரவணகுமார், மனைவி சரண்யா கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் சீர்வரிசை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வந்ததாம்.
விசாரணை
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சரண்யா நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து சரண்யாவின் தாய் விஜயலட்சுமி திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story