ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 1-ந் தேதி கிராம சபை கூட்டம்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 1-ந் தேதி கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 27 April 2022 11:58 PM IST (Updated: 27 April 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 1-ந் தேதி கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு தவறாமல் நடத்த வேண்டும் என அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். 

கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பறைகள், ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், விரிவான கிராம சுகாதார திட்டத்தை பற்றி விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டம், உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும். 

கிராமசபை கூட்டங்களில் பார்வையாளர்களாக தாசில்தார்கள் கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story