அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தாமரை ராஜேந்திரன் மீண்டும் தேர்வு


அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தாமரை ராஜேந்திரன் மீண்டும் தேர்வு
x
தினத்தந்தி 28 April 2022 12:14 AM IST (Updated: 28 April 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தாமரை எஸ்.ராஜேந்திரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அரியலூர், 
உட்கட்சி தேர்தல்
தமிழகத்தில் அ.தி.மு.க. உட்கட்சி அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்கள், அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
அ.தி.மு.க. தலைமை நியமித்த தேர்தல் பொறுப்பாளர்களிடம் போட்டியிடுபவர்கள் மனு தாக்கல் செய்தனர். அதன்படி, அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பெயர், பட்டியலை அ.தி.மு.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக அறிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
தாமரை எஸ்.ராஜேந்திரன் மீண்டும் தேர்வு
அரியலூர் மாவட்டத்தின் அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடாவான தாமரை எஸ்.ராஜேந்திரன் மீண்டும் தேர்வாகி உள்ளார். மாவட்ட அவைத்தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.கே.என்.ராமஜெயலிங்கம், இணை செயலாளராக கண்ணகி குப்புசாமி, துணை செயலாளர்களாக ஆர்.வாசுகி, தங்க.பிச்சமுத்து, பொருளாளராக எம்.அன்பழகன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக வை.கோ.சிவபெருமாள் (அரியலூர் தொகுதி), எஸ்.செல்லையா (ஜெயங்கொண்டம் தொகுதி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

Next Story