பணியிடத்தில் பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் தெரிவிக்க செயலி-மகளிர் ஆணைய தலைவர் தகவல்


பணியிடத்தில் பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் தெரிவிக்க செயலி-மகளிர் ஆணைய தலைவர் தகவல்
x
தினத்தந்தி 28 April 2022 12:14 AM IST (Updated: 28 April 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

பணியிடத்தில் பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் தெரிவிக்க செயலி உருவாக்கப்பட உள்ளதாக மகளிர் ஆணைய தலைவர் குமரி கூறினார்.

அரியலூர், 
ஆய்வுக்கூட்டம்
அரியலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 
கூட்டத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி, அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து, ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
பாலியல் சீண்டல்கள்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்கும் வகையில் ஐ.சி.சி. கமிட்டி (உலக புகார் அமைப்பு) உள்ளது. இந்த கமிட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு அல்லாத நிறுவனங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்க உள்ளது. மேலும், அதேபோன்று பணியிடத்தில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக ஒரு செயலியும் விரைவில் உருவாக்கப்படவுள்ளது. இதனால் பெண்கள் தங்களது புகார்களை ஆன்லைன் மூலம் எளிதாக தெரிவிக்கலாம், என்றார்.
கூட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் சிவக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேணி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ராணி, மாவட்ட சமூக நல அலுவலர் சாவித்ரி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story