லாரி மோதி முதியவர் படுகாயம்


லாரி மோதி முதியவர் படுகாயம்
x
தினத்தந்தி 27 April 2022 6:45 PM (Updated: 27 April 2022 6:45 PM)
t-max-icont-min-icon

லாரி மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

உடையார்பாளையம், 
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.சோழங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 70), புளி வியாபாரி. இவர் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக உடையார்பாளையம் திருச்சி-சிதம்பரம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தருமபுரி மாவட்டம் சூரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கவியரசன் (28) என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. 
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சீனிவாசனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கவியரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story