மணல் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் கைது
மணல் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி நடுநிலை பள்ளி அருகே கடந்த 20-ந் தேதி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரகுடி காலனியை சேர்ந்த ராஜாராம் (வயது 55) என்பவர் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த போது அவரை தடுத்து நிறுத்தி கிராம நிர்வாக அலுவலர் விசாரித்துள்ளார். இதில் அரசு அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜாராம் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு மாடுகளை அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் ராஜாராமை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story