முதல்-அமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகளை மே 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்-நீர் வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு
பெரம்பலூரில் முதல்-அமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகளை மே 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என நீர் வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார்.
பெரம்பலூர்,
சிறப்பு தூர்வாரும் திட்டம்
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி நீர் வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மே 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்
இந்த அரசாணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 48½ லட்சத்தில் 40 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கூட்டத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா மாவட்டத்தில் நீர்வளத்துறையால் செயல்படுத்தப்படும் சிறப்பு தூர்வாரும் பணிகளான வரத்து வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர் வாரி பக்க கரைகள் பலப்படுத்தவும், உழவர் குழுக்கள் அமைத்து பணிகளை உடனுக்குடன் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும், தேவையான கனரக வாகனங்களை உடனுக்குடன் ஆய்வு செய்யவும், தேவையான கனரக வாகனங்களை அதிகப்படுத்தவும், ஆக்கிரமிப்புகள் ஏதுமிருந்தால் அவற்றை அகற்றி நீர்வழித்டங்களை தூர்வாரவும், ஜல்சக்தி அபியான் போன்ற திட்டங்களை மாவட்டத்தில் செயல்படுத்தவும் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த தூர் வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அடுத்த மாதம் (மே) 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story