புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களாக விஜயபாஸ்கர்(வடக்கு), வைரமுத்து(தெற்கு) மீண்டும் தேர்வு
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களாக விஜயபாஸ்கர்(வடக்கு), வைரமுத்து (தெற்கு) ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
உட்கட்சி தேர்தல்
தமிழகத்தில் அ.தி.மு.க. உட்கட்சி அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்கள், அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
அ.தி.மு.க. தலைமை நியமித்த தேர்தல் பொறுப்பாளர்களிடம் போட்டியிடுபவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பெயர், பட்டியலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக அறிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்
மாவட்ட அவை தலைவர் ராமசாமி, மாவட்ட செயலாளர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., மாவட்ட இணை செயலாளர் சுவிதா, மாவட்ட துணை செயலாளர்கள் விஜயா, கருப்பையன், மாவட்ட பொருளாளர் இராமையா.
பொதுக்குழு உறுப்பினர்கள்
விராலிமலை தொகுதி சாலை மதுரம், கந்தர்வகோட்டை தொகுதி பாக்கியமேரி, புதுக்கோட்டை தொகுதி பழனிவேலு, ஆலங்குடி தொகுதி முகமது ஷாஜகான்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட நிர்வாகிகள்
மாவட்ட அவை தலைவர் லியாகத் அலி, மாவட்ட செயலாளர் வைரமுத்து, மாவட்ட இணை செயலாளர் மீனாள் முருகேசன், மாவட்ட துணை செயலாளர்கள் சரசு மாரிமுத்து, ராஜநாயகம், மாவட்ட பொருளாளர் அம்பி.
பொதுக்குழு உறுப்பினர்கள்
திருமயம் தொகுதி ராஜா அம்பலகாரர், அறந்தாங்கி தொகுதி வெற்றிச்செல்வன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களாக விஜயபாஸ்கர்(வடக்கு), வைரமுத்து (தெற்கு) ஆகியோர் அந்த பதவிகளுக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story