ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பிவைப்பு


ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பிவைப்பு
x
தினத்தந்தி 28 April 2022 12:51 AM IST (Updated: 28 April 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை ரேவதி நட்சத்திரம் ெரங்கநாதரின் பிறந்த தின நட்சத்திரமாகும். இந்த ஆண்டுக்குரிய சித்திரை ரேவதி  நட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறது. 
இதனைத்தொடர்ந்து நாளை, ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. அந்த தேரோட்டத்தின்போது ெரங்கநாதர், ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் அணிந்து தேரில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.  இதற்காக ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடந்தது. அப்போது ஆண்டாள், ெரங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டு வஸ்திரம் ஒரு கூடையில் வைத்து மாட வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டு, பின்னர் ஒரு வாகனத்தில் ஸ்ரீரங்கம் புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.


Next Story