புளியரையில் வருவாய்த்துறை சோதனைச்சாவடி அமைப்பு
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவள கடத்தலை தடுக்க புளியரையில் வருவாய்த்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
செங்கோட்டை:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவள கடத்தலை தடுக்க புளியரையில் வருவாய்த்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
வருவாய்த்துறை சோதனைச்சாவடி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக- கேரள எல்லையான புளியரை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு கனிமவள பொருட்கள் அதிகளவில் கடத்தி செல்லப்படுவதாகவும், சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அவற்றை கண்காணித்து தடை செய்யும் வகையில், புளியரையில் வருவாய்த்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்தார்.
24 மணி நேரமும் கண்காணிப்பு
அதன்படி புளியரையில் வருவாய்த்துறை சார்பில், நேற்று புதிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு மண்டல துணை தாசில்தார் தலைமையில், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக உதவியாளர் அடங்கிய குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரம் வாகனங்களை கண்காணித்து சோதனையிட்டு, ஆவணங்களை சரிபார்த்த பின்னரே கேரள மாநிலத்துக்கு அனுப்புகின்றனர்.
புளியரையில் ஏற்கனவே போலீஸ் சோதனைச்சாவடியும், போக்குவரத்து துறை சோதனைச்சாவடியும் உள்ளது. தற்போது வருவாய்த்துறை சார்பில் புதிதாக சோதனைச்சாவடி தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story