பெண் போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி


பெண் போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 28 April 2022 1:08 AM IST (Updated: 28 April 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் பெண் போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர், 
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2005-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 120 பெண் போலீசார் தற்போது போலீஸ் ஏட்டாக பதவிஉயர்வு பெற்றுள்ளனர். இந்தநிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் அவர்கள் அனைவரின் சந்திப்பு நிகழ்ச்சி விருதுநகரில் நேற்று நடைபெற்றது. இதில் 120 பேர் கலந்து கொண்டு தங்கள் பணி அனுபவங்கள், தற்போது தங்களது குடும்ப சூழல், குழந்தைகள் கல்வி பற்றி தகவல் பரிமாற்றம் செய்து மகிழ்ந்தனர். இதில் கலந்து கொண்ட விருதுநகர் கிழக்கு போலீஸ்நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டாக பணியாற்றும் மீனா, சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இம்மாதிரியான சந்திப்பு நிகழ்ச்சிகளால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் குறைவதுடன், பணியில் மேலும் ஈடுபாட்டுடன் செயல்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story