நிலம் வாடகைக்கு கேட்டு விவசாயியிடம் ரூ.82 ஆயிரம் மோசடி


நிலம் வாடகைக்கு கேட்டு விவசாயியிடம் ரூ.82 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 28 April 2022 1:14 AM IST (Updated: 28 April 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் கோபுரம் அமைக்க நிலம் வாடகைக்கு கேட்டு விவசாயியிடம் ரூ.82 ஆயிரம் நூதன மோசடி நடந்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி, ஏப்.28-
செல்போன் கோபுரம் அமைக்க நிலம் வாடகைக்கு கேட்டு விவசாயியிடம் ரூ.82 ஆயிரம் நூதன மோசடி நடந்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போன் கோபுரம்
லால்குடி தாலுகா நெய்க்குப்பையை சேர்ந்தவர் சேட்டு. விவசாயி. இவருடைய மனைவி விஜயா. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேட்டுவுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய மர்மநபர், தனியார் செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார். அப்போது தங்கள் நிறுவனம் சார்பில் 5-ஜி செல்போன் கோபுரம் அமைக்க நிலம் தேடி கொண்டு இருப்பதாகவும், உங்களுடைய நிலத்தில் செல்போன் கோபுரத்தை அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக ரூ.40 லட்சம் அட்வான்ஸ் தருவதாகவும், மாதம் ரூ.30 ஆயிரம் வாடகை தருவதாகவும் கூறியுள்ளனர்.
நூதன மோசடி
இந்த ஆசை வார்த்தையை நம்பிய சேட்டு அந்த நபருக்கு வாட்ஸ்அப் மூலம் அவருடைய நிலத்தின் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களையும், ரூ.5,100-யும் ஜிபே மூலமும் அனுப்பி உள்ளார். இதையடுத்து மீண்டும் அந்த நபர் செல்போனில் தொடர்பு கொண்டு இதற்கான செயல்பாட்டு கட்டணம் மற்றும் ஒப்புதல் கட்டணம் ரூ.28 ஆயிரத்து 500 மற்றும் ரூ.48 ஆயிரத்து 600 ஆகியவற்றை அனுப்பும்படி கூறி உள்ளார். இதையடுத்து சேட்டுவும் மொத்தம் ரூ.77 ஆயிரத்து 100-ஐ 2 தவணையாக அனுப்பினார்.
அதன்பிறகு சில நாட்களில் மீண்டும் போன் செய்து மேலும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை அனுப்பும்படி கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சேட்டுவின் மனைவி விஜயா இது குறித்து திருச்சி மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து, விவசாயியிடம் நூதனமுறையில் ரூ.82 ஆயிரத்து 200-ஐ மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story