குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது
குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியதை தொடர்ந்து நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.
நாகர்கோவில்,
குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியதை தொடர்ந்து நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.
போக்குவரத்து மாற்றம்
நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது பொதுப்பணித்துறை அலுவலக ரோட்டில் வேப்பமூடு சந்திப்பு முதல் செட்டிகுளம் சந்திப்பு வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக அந்த சாலையில் பொக்லைன் எந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து 15 நாட்கள் வரை நடக்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதாவது பொதுப்பணித்துறை அலுவலக ரோடு வழியாக அண்ணா பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலக சந்திப்பு, டதி பள்ளி சந்திப்பு, கற்கோவில் சந்திப்பு, மணிமேடை சந்திப்பு வழியாக வேப்பமூடு சந்திப்புக்கு வந்து அண்ணா பஸ் நிலையம் சென்றன.
பணிகள் முடியும் வரை...
இதேபோல பொதுப்பணித்துறை ரோடு வழியாக கோர்ட்டு ரோடு செல்லும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலக சந்திப்பு, டதி பள்ளி சந்திப்பு வழியாக கோர்ட்டு ரோடுக்கு சென்றன. மேலும் தக்கலை மற்றும் குளச்சல் போன்ற மேற்கு மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அனைத்து வாகனங்களும் கலெக்டர் அலுவலக சந்திப்பு, டதி பள்ளி சந்திப்பு, கற்கோவில் சந்திப்பு, மணிமேடை சந்திப்பு வந்து அண்ணா பஸ் நிலையம் மார்க்கமாக கன்னியாகுமரி சென்றன. இந்த போக்குவரத்து மாற்றமானது குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடையும் வரை அமலில் இருக்கும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து ேவப்பமூடு சந்திப்பு, மணிேமடை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
Related Tags :
Next Story