காதல் விவகாரத்தில் மகன் மாயம்; முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
சிக்பள்ளாப்பூர் அருகே காதல் விவகாரத்தில் மகன் மாயமானதால் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிக்பள்ளாப்பூர்:
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா நியாமகொண்டலு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 65). இவரது மகன் ராஜசேகர் (30). லாரி டிரைவர். இந்த நிலையில் ராஜசேகரும், கிராமத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியையான இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பற்றி அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜசேகரை அழைத்து எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ராஜசேகர் திடீரென மாயமானார். இதனால் ராஜசேகரை கண்டுபிடித்து தரும்படி கிருஷ்ணப்பா, மஞ்சேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜசேகரை போலீசார் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த கிருஷ்ணப்பா நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Related Tags :
Next Story