கர்நாடகத்தில புதிதாக 126 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில புதிதாக 126 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 April 2022 2:11 AM IST (Updated: 28 April 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 126 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: 

கர்நாடகத்தில் நேற்று 10 ஆயிரத்து 801 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 114 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். விஜயாப்புராவில் 4 பேர், மைசூரு, சித்ரதுர்காவில் தலா 2 பேர், தட்சிண கன்னடா, தார்வார், கோலார், துமகூருவில் தலா ஒருவர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

22 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. 39 லட்சத்து 47 ஆயிரத்து 209 பேருக்கு இதுவரை பாதிப்பு உறுதியாகி உள்ளது. வைரஸ் தொற்றுக்கு புதிதாக உயிரிழப்பு இல்லை. நேற்று 99 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 39 லட்சத்து 5 ஆயிரத்து 397 பேர் இதுவரை குணம் அடைந்து உள்ளனர். 

Next Story