கொடுமுடி தேங்காய் நார் குடோனில் தீ விபத்து


கொடுமுடி  தேங்காய் நார் குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 28 April 2022 2:17 AM IST (Updated: 28 April 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி அருகே தேங்காய் நார் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

கொடுமுடி அருகே உள்ள பள்ளக்காட்டூர் பகுதியில் தேங்காய் நார் குடோன் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுபற்றி  உடனே கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் நடராஜன் தலைமையில் வீரர்கள் அங்கு சென்றனர். பின்னர் குடோன் மீது எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமளவென்று பற்றி எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையில் வீரர்களும் அங்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மின்கசிவே இந்த தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

Next Story