மனைவியுடன் சினிமாவுக்கு செல்ல விடுமுறை கேட்ட போலீஸ்காரர்


மனைவியுடன் சினிமாவுக்கு செல்ல விடுமுறை கேட்ட போலீஸ்காரர்
x
தினத்தந்தி 28 April 2022 2:37 AM IST (Updated: 28 April 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மனைவியுடன் சினிமாவுக்கு செல்ல விடுமுறை கேட்டு போலீஸ்காரர் ஒருவர் இன்ஸ்பெக்டருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் பிரிவில் டிரைவராக பணியாற்றும் போலீஸ்காரா் ஆனந்த். இவர், விடுமுறை கேட்டு இன்ஸ்பெக்டருக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் ‘எனது மனைவி தன்னுடன் நடைபயிற்சி செல்லவும், தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கவும் ஆசைப்படுகிறார். எனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் ஆனந்த் கூறி இருந்தார்.

  இதனை ஏற்றுக் கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆனந்திற்கு விடுமுறை வழங்கி இருந்தார். இந்த நிலையில், மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக விடுமுறை கேட்டு இன்ஸ்பெக்டருக்கு, போலீஸ்காரர் ஆனந்த் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story