ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பின்புறம் வரிசையாக வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகள்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பின்புறம் வரிசையாக வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டியால் துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பின்புறம் வரிசையாக வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டியால் துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குப்பை தொட்டிகள்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள பாவடை வீதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் குப்பை தொட்டியில் போடப்பட்டு இங்குள்ள ரோட்டில் தினந்தோறும் வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதால் அங்கு குடியிருப்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் ரோட்டில் நடந்து செல்பவர்களும் மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் அனைத்து குப்பை தொட்டிகளும் அகற்றப்பட்ட நிலையில், தற்போது பாவாடை வீதியில் வரிசையாக குப்பை தொட்டி வைக்கப்படுவதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அகற்ற வேண்டும்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டு வந்து வைக்கப்படுகிறது. அதிகமாக துர்நாற்றம் வீசுவதால் நாங்கள் வீட்டில் இருக்க முடியவில்லை.
இங்கு குப்பை தொட்டிகள் வைக்கக்கூடாது என்று மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கூறினாலும் அவர்கள் கேட்பதில்லை. தொடர்ந்து இங்கு குப்பை தொட்டிகளை வைத்து வருகிறார்கள். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பாவாடை வீதியில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள
Related Tags :
Next Story