நடிகர்கள் சுதீப்-அஜய் தேவ்கான் மோதல்: இந்தி நமது தேசிய மொழியாக இருக்கவே முடியாது - சித்தராமையா கருத்து


நடிகர்கள் சுதீப்-அஜய் தேவ்கான் மோதல்: இந்தி நமது தேசிய மொழியாக இருக்கவே முடியாது - சித்தராமையா கருத்து
x
தினத்தந்தி 28 April 2022 2:39 AM IST (Updated: 28 April 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

நடிகர்கள் சுதீப்-அஜய் தேவ்கான் கருத்து மோதலில் ஈடுபட்ட நிலையில் இந்தி நமது தேசிய மொழியாக இருக்கவே முடியாது என்று சித்தராமையா கருத்து கூறியுள்ளார்.

பெங்களூரு:

தேசிய மொழி அல்ல

  நடிகர் சுதீப், ‘இந்தி தேசிய மொழி அல்ல’ என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு பதிலளித்த இந்தி நடிகர் அஜய் தேவ்கான், ‘இந்தி தேசிய மொழி இல்லை என்றால், நீங்கள் எதற்காக உங்கள் படங்களை இந்தி மொழியில் வெளியிடுகிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மீண்டும் பதிலளித்த சுதீப், ‘தான் அனைத்து மொழிகளையும் மதிப்பதாகவும், யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது தனது எண்ணம் கிடையாது’ என்றும் தெரிவித்துள்ளார்.

  இந்தி மொழி விஷயத்தில் நடிகர்கள் சுதீப், அஜய் தேவ்கான் இருவரும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். சுதீப் கருத்தை கன்னடர்கள் ஆதரித்து கருத்து வெளியிட்டனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இருக்கவே முடியாது

  இந்தி நமது தேசிய மொழியாக இருந்ததும் இல்லை, வரும் காலத்தில் இருக்கப்போவதும் இல்லை. அவ்வாறு இருக்கவே முடியாது. நமது நாட்டின் பிற மொழிகளை ஒவ்வொரு இந்தியரும் மதிக்க வேண்டியது அவசியம். 

ஒவ்வொரு மொழியும் உயர்ந்த வரலாற்றை தன்னக்கத்தே கொண்டுள்ளது. அது அந்த மொழி பேசும் மக்களை பெருமை கொள்ள செய்கிறது. நான் கன்னடராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
  இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Next Story