துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்


துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 28 April 2022 2:39 AM IST (Updated: 28 April 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மேட்டூர்:-
மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என்று அவர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த நேரத்தில் சம்பளம் வழங்க வலியுறுத்தி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் நேற்று மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். 
தகவல் அறிந்து நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, கவுன்சிலர்கள் ரங்கசாமி, கீதா, சீனிவாசன், இளம்வழுதி ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நேரத்தில் சம்பளம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக மேட்டூரில் துப்புரவு பணி நேற்று காலை தாமதமாகவே தொடங்கியது.

Next Story